மோசமான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்.. 12 மாதத்தில் புதிய கட்டிடம் கட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
By : Bharathi Latha
ராமநாதபுரம் மாவடம் தொண்டியைச் சேர்ந்த வக்கில் ஆசிக் அகமது மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது தொண்டியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்ற இந்த பள்ளிக்கலத்தில் மாணவர்களுக்கு தேவையான வருப்பகள் கிடையாது. அதேபோல விளையாட்டு மைதானம், காலை மற்றும் மதிய உணவு அருத்தும் அறையும் இல்லை இந்தமணியின் கட்டப்பட்டு 70 ஆண்டுகள் கடந்த 16 ஆண்டுக்கு முன்பு பள்ளி கட்டிடத்தில் பராமரிப்பு பணி சேதம் மேற்கொள்ளப்பட்டது.
சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. எப போது வேண்டுமானாலும் இடிந்து விழும்நிலையில் அந்த கட்டிடம் உள்ளது. எனவே ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன்பே கட்டிடத்தை இடித்து அகற்றும்படி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிளேன். இதுவரை ஏந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாணவ மாணவிகளின் நலன் கருதி தொண்டியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தொண்டி தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்து அபாயகரமானநலையில் உள்ளது தொடர்பான புகைப்படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து நீதிபதிகள் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ள கட்டிடத்தில் எப்படி வகுப்பறைகள் நடத்தப்படுகின்றன? மாணவ மாணவிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலைக்க உள்ளது என அதிருப்தி தெரிவித்தார்.
விசாரணை முடிவில் தொடக்கப்பள்ளி கட்டிடத்தை 12 வாரத்தில் இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அங்கு புதிய கட்டிடம் காட்டுவதற்கு வேண்டி அரசு தாமதிக்கும்பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது அந்த தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Input & Image courtesy: News