உலக நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தவும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் பிரதமர் மோடி 12-ஆம் தேதி அமெரிக்கா பயணம்!
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக 12-ம் தேதி அமெரிக்க செல்கிறார்.அவர் டிரம்பை சந்தித்து பேசுகிறார்.

பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்கிறார் .இது குறித்து மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் முசிறி நேற்று பேட்டி அளித்தார் .அவர் கூறியதாவது :-
பிரதமர் மோடி இம்மாதம் 12-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இது இரண்டு நாள் பயணம் ஆகும். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் இரண்டாவது தடவை பதவி ஏற்ற பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை.ஜனாதிபதி ஆனதிலிருந்து இருவருக்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது .அவர் பதவியேற்ற மூன்று வாரங்களில் மோடிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் இருநாட்டு உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். அங்கு ட்ரம்பை மோடி சந்திக்கிறார். வர்த்தக முதலீடு, தொழில்நுட்பம் ,பாதுகாப்பு, ஒத்துழைப்பு ,பயங்கரவாத எதிர்ப்பு இந்தோ- பசிபிக் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் இருநாட்டுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவி வருகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் 54 லட்சம் இந்தியர்களும் உயர் கல்வி படிக்கும் 3 லட்சத்து 50 ஆயிரம் இந்திய மாணவர்களும் இந்த உறவே மேலும் வளர்க்கிறார்கள். பிரதமரின் பயணம் நல்லுறவுக்கு புதிய வேகத்தையும் திசையையும் காட்டும். இப்பயணத்தில் கூட்டு அறிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அமெரிக்க பயணத்துக்கு முன்பு பிரதமர் மோடி இம்மாதம் பத்தாம் தேதி பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்திக்கிறார். இருவரும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
மேலும் பிரான்ஸ் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றுகிறார்கள். இருவரும் மார்க் செயலி நகருக்கு பயணம் சென்று அங்கு இந்திய துணை தூதரகத்தை திறந்து வைக்கிறார்கள்.போர்வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அத்துடன் கடாரச்சே நகருக்கு செல்கிறார்கள். அங்கு சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலையைப் பார்வையிடுகிறார்கள். பிரான்சிலிருந்து 12-ம் தேதி மோடி அமெரிக்கா செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.