Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்.. ரூ.1.25 கோடி மதிப்பிலான 3 செமிகண்டக்டர் தொழிற்சாலை திறப்பு..

இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்.. ரூ.1.25 கோடி மதிப்பிலான 3 செமிகண்டக்டர் தொழிற்சாலை திறப்பு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 March 2024 10:09 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி 'இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொடக்கம்' நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு 2024 மார்ச் 13 அன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார். செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதும், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிப்பதும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டமாகும். இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, குஜராத்தின் தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை அசாமின் மோரிகானில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (OSAT) தொழிற்சாலை மற்றும் குஜராத்தின் சனந்தில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (OSAT) தொழிற்சாலை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.


இந்தியாவில் செமிகண்டக்டர் தொழில் திட்டங்கள் அமைப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் (டிஇபிஎல்) தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தில் (டி.எஸ்.ஐ.ஆர்) செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை அமைக்கப்படும். 91,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மொத்த முதலீட்டுடன், இது நாட்டின் முதல் வணிக செமிகண்டக்டர் தொழிற்சாலையாகும். அசாமின் மோரிகானில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (OSAT) வசதியை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செமிகண்டக்டர் அம்செம்பளி, சோதனை, மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் (ATMP) என மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் சுமார் 27,000 கோடி ரூபாய் மொத்த முதலீட்டில் அமைக்கப்படும்.


சனந்தில் உள்ள அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் (ஓஎஸ்ஏடி) தொழிற்சாலை, சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மூலம் செமிகண்டக்டர் அசெம்பிளி, சோதனை, மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் ஆகியவற்றிற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் சுமார் 7,500 கோடி ரூபாய் மொத்த முதலீட்டில் அமைக்கப்படும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News