Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டவிரோதமான கிறிஸ்தவ காப்பகம்.. மீட்கப்பட்ட 13 மன நோயாளிகள்.. அதிர வைக்கும் பின்னணி..

சட்டவிரோதமான கிறிஸ்தவ காப்பகம்.. மீட்கப்பட்ட 13 மன நோயாளிகள்.. அதிர வைக்கும் பின்னணி..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 July 2024 2:35 AM GMT

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் நெல்லியாளம் அருகே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அகஸ்டின் என்பவர் நடத்தி வரும் மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம் உரிமம் இன்றி இயங்கி வருவது தெரியவந்ததையடுத்து தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதாவது முறையாக அனுமதி பெறாமல், இவர் மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகத்தை நடத்தி வருகிறார் என்பது தொடர்பான குற்றச்சாட்டு தான் அது. கடந்த வாரம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சிகரமான தகவல் உலகத்திற்கு தெரிய வந்தது. இதனால் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேவாலா காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தங்குமிடத்தை ஆய்வு செய்யத் தொடங்கினர்.


8 ஜூலை 2024 அன்று, அதிகாரிகள் தங்குமிடத்தை முழுமையாக ஆய்வு செய்ததில் அவர்கள் முறையாக உரிமம் பெறாமல் இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. அது மட்டும் கிடையாது, மனநலம் குன்றிய நபர்களை பராமரிக்க முறையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பரிதாபகரமான நிலையில் அவர்களை அடைத்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இன்னும் கவலையளிக்கும் வகையில், இறந்த 20-க்கும் மேற்பட்ட நபர்களின் உடல்கள் அரசின் முறையான அனுமதி இன்றி தங்குமிடத்தின் பின்பகுதியில் புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த 20 பேரின் அடையாளம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்தவரின் உடல் உறுப்புகளை விற்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்தான சந்தேகம் உள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது தங்கும் விடுதி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் வளாகத்திற்கு சீல் வைக்க வந்தபோது அகஸ்டின் சம்பவ இடத்தில் இல்லை.


நீலகிரி மாவட்ட அதிகாரிகள் தங்குமிடத்தின் உரிமையாளர் உட்பட 10 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணையில் லவ் ஷேர் அறக்கட்டளை என்ற பெயரில் டிரஸ்ட் வைப்பது போல் அமைத்து, அதனுள் மனநலம் குன்றியவர்களை இப்படி அடைத்து வைத்திருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் கிடையாது 23 ஆண்டுகளாக நடத்திவரப்பட்ட 'லவ் ஷேர்' காப்பகத்தில் இருந்து 13 மன நோயாளிகள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News