மண்டியிட்ட சூர்யா - காட்சி நீக்கம்? "இந்த அவமானம் தேவையா?" - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்! #JaiBhim
By : Kathir Webdesk
கடந்த 10 வருடங்களாக சர்ச்சை நடிகர் சூர்யா நடித்த எந்த படமும் வெற்றியடையாததால் வேறு வழியின்றி தன் படங்களை அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு OTT தளங்களில் மட்டும் தற்போது வெளியிட்டு வருகிறார். நடிகர் சூர்யாவின் மார்க்கெட் புதிய நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரை விட கீழிறங்கி அதளபாதாளத்துக்கு சென்று விட்டதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
எனவே, 2020-ஆம் ஆண்டு சூரரை போற்று, 2021-ஆம் ஆண்டு ஜெய் பீம் ஆகிய தனது இரு திரைப்படங்களும் தியேட்டர்கள் வெளியிட ஆர்வம் காட்டாததால், வேறு வழியின்றி அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் தற்போது வெளி வந்துள்ள ஜெய் பீம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. கம்மாபுரம் இருளர் சமூகத்தை சேர்ந்த ராசாக்கண்ணு என்ற பழங்குடி ஒருவரை தமிழக போலீஸ் அடித்து கொன்ற வழக்கில் தண்டனை அடைந்த போலீஸ் அதிகாரி அந்தோணிசாமி, பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்த உண்மையை திரித்து படத்தில் கொலை செய்யும் அதிகாரி ஒரு வன்னியர் என்பது போல குறியீடு வைத்திருக்கிறார்கள்.
இந்த வரலாற்று திரிப்புக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளது வன்னியர் சமூகம். வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட தமிழகத்தில் சூர்யா ரசிகர் மன்ற போர்டுகள் தகர்த்தெறியப்பட்டு வருகின்றன.
இதை அறிந்து பதறிப்போயுள்ள சூர்யா மற்றும் ஜெய் பீம் திரைப்படக்குழுவினர் அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்குவதாக உத்திராவதம் கொடுத்துள்ளனராம். இது போன்ற அவமானமெல்லாம் சூர்யாவுக்கு தேவையா? ஒழுங்கா உண்மையை அடிப்படையாக கொண்டு படத்தை எடுக்கவில்லை என்றால் இப்படி தான் அசிங்கப்பட்டு நிற்கவ வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.