Kathir News
Begin typing your search above and press return to search.

நாளை கோவா செல்லும் பிரதமர்! ₹1,330 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் அடிக்கல்!

நாளை கோவா செல்லும் பிரதமர்! ₹1,330 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் அடிக்கல்!
X

SushmithaBy : Sushmitha

  |  5 Feb 2024 11:19 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க கோவா செல்ல உள்ளார்.

மேலும் காலை 10:30 மணி அளவில் ஓ. என். ஜி. சி. கடல்வாழ் உயிரின மையத்தை பிரதமர் திறந்து வைத்து விட்டு பிறகு 10:45 மணியளவில் 2024 ஆம் ஆண்டில் இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கி வைக்க உள்ளார். பிறகு பிற்பகல் 2:45 மணியளவில் வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த கோவா 2047 என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் உலக தரத்தில் பயிற்சி மையமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ள ஓ. என். ஜி. சி. கடல் வாழ் உயிரின மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 15,000 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கனடா, ஜெர்மனி, ரஷ்யா, நெதர்லாந்த், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளின் பிரத்தியேக அரங்குகள் பிரதமர் கலந்து கொள்ள உள்ள வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த கோவா 2047 நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது. அதோடு 1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

Source : Asianetnews Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News