கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரம் - 14 மசூதிகளின் மீது அதிரடியாக பாய்ந்த வழக்கு
By : Mohan Raj
பெங்களூருவில் ஒலிபெருக்கி பயன்பாட்டில் விதிமுறைகளை மீறியதாக 14 மசூதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கூறினார், இந்த விவகாரம் கர்நாடகா மாநிலத்திலும் எதிரொலித்து வருகிறது. இந்த விவகாரத்தை அடுத்து கர்நாடகத்தில் உள்ள மசூதிகளில் ஒலி பெருக்கி அதிக சத்தத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர் இதனை செய்யாவிடில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பொது இடங்களில் ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது ஆனால் தற்போது இந்த விவகாரம் முற்றிய காரணத்தினால் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுப்படிதான் மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இது தொடர்பாக கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படும் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் நோட்டீஸ் வழங்கப்பட்டன குறிப்பாக கர்நாடகம் முழுவதும் 250 மசூதிகளுக்கு மேல் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவது தொடர்பு குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீசில் குறிப்பிட்ட அளவு டெசிபல் ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டுமெனவும், ஒலி மாசு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக கடைபிடிக்க வேண்டும் விதிமீறல் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்பொழுது சில மசூதிகளில் ஒலிபெருக்கியின் சத்தத்தை கட்டுப்படுத்த வில்லை என புகார் எழுந்தது, மேலும் பொதுமக்களும் மசூதிகளில் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்க வில்லை எனவே புகார் அளித்தனர். இதனை போலீசார் கண்காணித்து விதிமுறைகளை மீறி இதன் அடிப்படையில் பெங்களூரில் இதுவரை 14 மசூதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.