Kathir News
Begin typing your search above and press return to search.

வீர சாவர்க்கரின் 141 வது பிறந்தநாள்....புத்தகம் வெளியிட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா!

வீர சாவர்க்கரின் 141 வது பிறந்தநாள்....புத்தகம் வெளியிட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா!
X

SushmithaBy : Sushmitha

  |  29 May 2024 1:18 PM IST

சுதந்திரப் போராட்ட வீரர் வீர் விநாயகர் தாமோதர் சாவர்க்கரின் 141 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக ஆளுநர் வரை பலரும் சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தினர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், தாய்நாட்டின் சேவையில் தன் வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் பலர் நாடு முழுவதும் உள்ள சாவர்க்கரின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதுமட்டுமின்றி பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தான் எழுதி வந்த வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை என்ற புத்தகத்தையும் இன்று வெளியிட்டுள்ளார்.

அதுவும் அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவரது புகைப்படம் முன்பு தனது புத்தகத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இது குறித்த வீடியோ பதிவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Source : Asianet news Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News