தேசிய பாதுகாப்பு அகாடமி புதிய சாதனை:முதல் முறையாக 148-வது பயிற்சி வகுப்பை நிறைவு செய்த 17 பெண் வீராங்கனைகள்!

By : Sushmitha
தேசிய பாதுகாப்பு அகாடமி 2025 மே 30 அன்று ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது. அகாடமியின் வசந்த கால 148-வது பயிற்சி வகுப்பின் கீழ் பயிற்சியை நிறைவு செய்த 336 பேர்களில் 17 பெண் வீராங்கனைகளும் இடம் பெற்றுள்னர் பயிற்சியை நிறைவு செய்த 336 வீரர் வீராங்கனைகளுடன் சேர்த்து மொத்தம் 1,341 பேர் புகழ்பெற்ற கேதர்பால் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்றனர்
சிறப்பாக செயல்பட்டதை அங்கீகரிக்கும் விதமாக, பட்டாலியன் கேடட் துணைத் துலைவர் பிரின்ஸ் ராஜுக்கு குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கத்தையும் அகாடமி கேடட் கேப்டன் உதய்வீர் சிங் நேகிக்கு குடியரசுத்தலைவரின் வெள்ளிப் பதக்கத்தையும் பட்டாலியன் கேடட் கேப்டன் தேஜாஸ் பட்டுக்கு குடியரசுத்தலைவரின் வெண்கலப் பதக்கத்தையும் டாக்டர் வி.கே.சிங் வழங்கினார் ஒட்டுமொத்த சிறப்பு செயல்பாட்டுக்காக தலைமைப் பணியாளர் பதாகை கோல்ஃப் படைக்கு வழங்கப்பட்டது
இந்த அணிவகுப்பு நிகழ்வில் சேத்தக் ஹெலிகாப்டர்கள் சூப்பர் டிமோனா மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடர்கள் சுகோய்-30 போர் விமானங்கள் இடம் பெற்றன மேலும் இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பள்ளிக் குழந்தைகள் பொதுமக்கள் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஆயுதப் படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்
