ராஜஸ்தானில் கட்டாய மதமாற்றம்!! விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு 15 ஆண்டுகளாக நடந்தது அம்பலம்!!

By : G Pradeep
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஆல்வார் என்கின்ற பகுதியில் கிறிஸ்தவ மிஷனரிகள் சேர்ந்தவர்கள் நடத்தும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அந்தப் பகுதிகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கி படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தினமும் பள்ளிக்கு அனுப்பாததால் அதிக நேரம் விடுதியிலேயே தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கு செல்லாமல் விடுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு ஆகும் உணவு மற்றும் பிற செலவுகள் அனைத்தையும் கிறிஸ்துவ மிஷனரிகள் ஏற்று செய்து வந்துள்ளனர். இந்த விடுதியை சுற்றியுள்ள சில பகுதிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மதம் மாறக்கோரி தூண்டப்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் சுதிர் சவுத்ரி மதமாற்றம் செய்வது கடந்த 15 ஆண்டுகளாகவே விடுதியில் நடந்து வருகிறது என்றும், இங்கு மதம் மாறுவதற்காக சிறப்பு பயிற்சி சென்னையில் நிறுவனம் ஒன்று அளித்து வருவதாக கூறினார்.
மேலும் இவ்விடுதியில் தங்கும் குழந்தைகளை சோஹன் சிங் மற்றும் அம்ரித் சிங் என்ற இரண்டு போதகர்கள் பைபிள் படிக்க கோரி கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட நிலையில் அம்ரீத் சிங்கை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் தடை மசோதா தற்பொழுது சட்டப்பேரவையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
