பட்ஜெட்டில் வேளாண்மைக்கு முன்னுரிமை.. விவசாயத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு..
By : Bharathi Latha
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிறகு தன்னுடைய முழு பட்ஜெட்டை தற்போது இன்று தாக்கல் செய்தது. மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் காலை 11 மணிக்கு தொடங்கி தனது உரையை பகல் 12 30 மணிக்கு நிறைவு செய்தார். சரியாக 84 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். வேளாண் துறை நம்முடைய முதுகெலும்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் மோடி அரசாங்கம் வேளாண் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போகும் நடவடிக்கைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக பட்ஜெட்டில் அவர்கள் கூறும் போது, வேளாண் துறையில் டிஜிட்டல் மயம் புகுத்தப்படும். டிஜிட்டல் முறையில் காரீஃப் வேளாண் பயிர்கள் தொடர்பாக சர்வே எடுக்கப்படும். விவசாயத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இறால் வளர்ப்பு, பதப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கான நிதியுதவி நபார்டு மூலம் எளிதாக்கப்படும்.
வேளாண்மைக்கு முன்னுரிமை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம். எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்கப்படும். வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1,52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருக்கிறது.
Input & Image courtesy:News