கடந்த ஆண்டு மே மாதத்தை விட 16 சதவீதம் அதிக வசூலை பெற்ற ஜிஎஸ்டி!

By : Sushmitha
ஜிஎஸ்டி மூலம் கடந்த மே மாதம் ரூபாய் 2.01 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
அதாவது கடந்த மே மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி ரூபாய் 35,434 கோடி வசூலையும் மாநில ஜிஎஸ்டி ரூபாய் 43,902 கோடி வசூலையும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூபாய் 1.09 லட்சம் கோடி வசூலையும் பெற்றதாகவும் செஸ் வரி ரூபாய் 12,879 கோடி வசூல் பெற்று மொத்தம் ரூபாய் 2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலை பெற்றதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,72,739 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வசூல் ஆகியிருந்ததாகவும் இந்த வசூல் நடப்பாண்டு மே மாதத்தில் இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி வசூலாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருமானம் 13.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இறக்குமதி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 25.2 சதவிகிதம் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
