பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்த 16 மாவோயிஸ்டுகள்!! சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த செயல்!!

By : G Pradeep
தேடப்பட்டு வந்த 16 மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரணடைந்துள்ளனர். ரூபாய் 70 லட்சம் வெகுமதி அறிவித்து நாராயணப்பூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் இயக்கத்தில் இருக்கும் 16 பேர் கடந்த அக்டோபர் எட்டாம் தேதி பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.
பல்வேறு குற்ற நடவடிக்கைகள் செய்த காரணத்தினால் தலா 8 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நிலையில் இந்த இயக்கத்தின் துணைத் தளபதியான மர்காம் என்ற ரத்தனும், மனோஜ் துர்கா என்கின்ற சங்கர் ஆகியோரும் சரணடைந்தனர்.
இந்நிலையில் சரணடைந்தவர்களின் மறுவாழ்வு கருதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் அரசு சார்பில் காசோலையாக வழங்கப்பட்டது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்குள் இருக்கும் நச்சல்கள் அனைவரும் அளிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அமித்ஷா கூறி இருந்ததை உண்மையாக்கும் வகையில் சத்தீஸ்கரில் 192 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்திருப்பது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
