சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்!! அமலாக்கத் துறை விசாரணை!!

By : G Pradeep
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் தங்கம் திருட்டு போன வழக்கில் புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அமலாக்கத்துறை தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகாவில் சோதனை நடத்தியதில் ரூ. 1.30 கோடி மதிப்புடைய அசையா சொத்துக்கள் மற்றும் 100 கி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கம் செய்யப்பட்டது.
2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை சபரிமலை துவாரபாலகர்கள் சிலை போன்றவற்றில் தங்க முலாம் பூசப்பட்டிருந்த பாகங்கள் அகற்றப்பட்டதாகவும், பழுது பார்ப்பிற்காக கோவில் வளாகத்தை விட்டு வெளியில் எடுத்து சென்றதாகவும் கூறப்பட்டது.
இதனை சென்னை மற்றும் கர்நாடகாவில் இருக்கும் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ், ரோடன்ஸ் ஜுவல்லர்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ரசாயன செயல்பாடு மூலம் தங்கம் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு மோசடி நடந்து இருப்பதாகவும், இது குறித்த தகவல்களை முழுமையாக வெளிக்கொண்டு வர அமலாக்கத்துறை செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
