Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கன்: தாலீபான்கள் கொண்டாட்டத்தின் காரணமாக உயிரிழந்த அப்பாவி மக்கள்!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டம் காரணமாக வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அப்போது பரிதாபமாக 17 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

ஆப்கன்: தாலீபான்கள் கொண்டாட்டத்தின் காரணமாக உயிரிழந்த அப்பாவி மக்கள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Sept 2021 7:19 AM IST

ஆப்கானிஸ்தானில் தன்னுடைய முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் தற்பொழுது தங்களுடைய வெற்றி கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான் அமைப்பினர் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் காபூல் விமான நிலையத்தையும் தலிபான் அமைப்பினர் முழுமையாக கைப்பற்றி உள்ளார்கள்.


தலிபான் அமைப்பின் மூத்த அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் தலைமையில் ஆட்சி அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் எதிர்ப்புப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான்களுக்கு அடி பணிய போவதில்லை மேலும் தலிபான்களை எதிர்த்து போரிட தயார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பஞ்ச்ஷிரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே கடைசியாக இருந்த மாகாணத்தை கைப்பற்றிய இந்த வெற்றியை கொண்டாட தலிபான்கள் நேற்று இரவு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடி உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருந்த அப்பாவி பொது மக்கள் 17 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக காபூலில் இருக்கும் மருத்துவமனைகள் தகவல் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Input & Image Courtesy - Zee News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News