Kathir News
Begin typing your search above and press return to search.

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு; தனிநபர் வருமான வரியில் ரூ.17,500 சேமிப்பு என மத்திய பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய அம்சங்கள்

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு; தனிநபர் வருமான வரியில் ரூ.17,500 சேமிப்பு என மத்திய பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய அம்சங்கள்
X

SushmithaBy : Sushmitha

  |  23 July 2024 7:54 AM GMT

நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தரப்படும்,

காசி விஸ்வநாதர் கோவில், பீகார் கயா, புத்தகயா போன்ற கோவில்கள் உலக தரத்திற்கு மேம்படுத்தப்படும்,

நாட்டில் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூபாய் 1,000 கோடி ஒதுக்கப்படும்,

2024 - 2025 நிதியாண்டில் 4.9% ஆக அரசின் நிதி பற்றாக்குறை குறையும். மேலும் 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிப்பு,

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் மூன்று மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்கவரி குறைப்பு,

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியில் 15% இருந்து 6% ஆக குறைப்பு. மேலும் பிளாட்டினத்திற்கு 6.4% ஆகவும் குறைப்பு,

மொபைல் போன் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15% ஆக குறைப்பு,

மத்திய பட்ஜெட்டில், நாடு முழுவதும் 12 மெகா தொழிற் பூங்காக்கள் அமைக்க விரைவில் ஒப்புதல் அளிப்பு, .

ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஏஞ்சல் வரி ரத்து,

இதுவரை அறக்கட்டளைகளுக்கு இரண்டு முறையாக இருந்த வரி செலுத்துவது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரிமுறை அறிமுகம் போன்றவை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

மேலும் 2024 - 25 பட்ஜெட்டில் வருமான வரி முறையில் ஆண்டுக்கு 3 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வருமான வரிமுறையில் சம்பளம் பெறும் ஊழியர் தனது வருமான வரியில் ₹ 17,500/- வரை சேமிக்க உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News