Kathir News
Begin typing your search above and press return to search.

அக்டோபர் 18 முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படுகிறது அமெரிக்க இந்து கோவில்!

அக்டோபர் 18 முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படுகிறது அமெரிக்க இந்து கோவில்!

SushmithaBy : Sushmitha

  |  13 Oct 2023 11:45 AM GMT

புதுடில்லியை சேர்ந்த அக்ஷர்தாம் அமைப்பிற்கு சொந்தமான ஸ்ரீ சுவாமிகள் நாராயணன் கோவில் நிர்வாகத்தினர் இந்தியாவிற்கு வெளியே அமெரிக்கா நியூ ஜெர்சியில் பிரம்மாண்டமான இந்து கோவிலை கட்டி வந்தனர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக 183 ஏக்கரில் இந்த கோவில் கட்டப்பட்டு வந்தது.

சமீபத்தில் தான் இந்த கோவிலின் கட்டுமான வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடிந்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு முறைப்படி மகாராஜ் சுவாமிகள் முன்னிலையிலும் வேத மந்திரங்கள் முழங்க இக்கோயிலின் திறப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் 10,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டும் இந்தியாவின் கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை எடுத்துரைக்கும் ஒரு ஸ்தலமாக அமெரிக்காவில் இந்த கோவில் அமைக்கப்பட்டது, இசைக்கருவிகளும் சிற்பங்களும் இந்த கோவிலில் இடம் பெற்றிருந்தன.

காலம் காலமாக அனைத்து கால நிலைகளிலும் நிலைத்து நிற்கும் வகையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் கருவறை உடன் கூடிய பிரதான மண்டபம் மற்றும் 12 துணை கோவில்கள், ஒன்பது கோபுரங்கள் பிரம்மாண்ட அழகிய வேலைபாடுகளுடன் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி முதல் இக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News