Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திற்கு ஜாக்பாட் : 183.67 கோடி ரூபாயை வழங்கும் மத்திய அரசு!

தமிழகத்திற்கு  ஜாக்பாட் : 183.67 கோடி ரூபாயை வழங்கும் மத்திய அரசு!
X

ShivaBy : Shiva

  |  9 July 2021 7:31 AM IST

தமிழகத்திற்கு நான்காவது தவணையாக வருவாய் பற்றாக்குறை நிதியாக ரூபாய் 183.67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசின் நிதிக் குழு வழங்கி வருகிறது. மாநிலத்தில் வருவாயை விட செலவு அதிகமாக காணப்படும் போது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் மத்திய அரசு மாநிலங்களுக்கான வருவாய் பற்றாக்குறை நிதியை வழங்கும். அதன் அடிப்படையில் தற்போது 17 மாநிலங்களுக்கு 4வது தவணையாக ரூ.9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.183.67 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

15-வது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்குவங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிதிக் குழுவின் பரிந்துரையின் படி இந்த 17 மாநிலங்களுக்கும் இதுவரை மொத்தமாக ரூ.39,484 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News