தமிழக மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த குட் நியூஸ்:ரூ1,853 கோடி செலவில் பரமக்குடி முதல் இராமநாதபுரம் வரை 4 வழிச்சாலை!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான 46 கிலோ மீட்டர் தூர நெடுஞ்சாலையை ரூபாய் 1,853 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
இந்த சாலை கடல் ஓரம் வழியாக தனுஷ்கோடி வரை நீடிக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாராக்கி வருவதாகவும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இது இருந்து வருவதாகவும் முக்கிய கலாச்சார மற்றும் நம்பிக்கை மையமாக உள்ள ராமேஸ்வரத்தை இணைப்பது பாம்பன் பாலம் மற்றும் நான்கு வழிச்சாலை திகழ்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்
அதுமட்டுமின்றி இந்த நான்கு வழிச்சாலை மதுரை ராமேஸ்வரம் ரயில் நிலையங்களையும் ஒரு விமான நிலையத்தையும் பாமன் ராமேஸ்வரம் போன்ற சிறு துறைமுகங்களை ஒருங்கிணைப்பதால் சரக்கு மற்றும் பயணிகளின் போக்குவரத்து வேகமாக நடைபெறும் நேரடியாக 8.4 லட்சம் பேருக்கும் மறைமுகமாக 10.45 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்
பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு முக்கிய மதம் மற்றும் பொருளாதார மையங்களுக்கு இடையே இணைப்பு ஏற்படும் மேலும் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது