ஒடிசாவில் ஓராண்டை எட்டிய பாஜக அரசு:ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூன் 20 ஒடிசாவிற்கு பயணம் மேற்கொண்டு ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
ஒடிசாவில் பாஜக அரசு ஒரு வருடம் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் புவனேஸ்வரில் நடைபெறும் மாநில அளவிலான விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி குடிநீர்,நீர்ப்பாசனம்,விவசாய உள்கட்டமைப்பு,சுகாதார உள்கட்டமைப்பு,கிராமப்புற சாலைகள் மற்றும் பாலங்கள்,தேசிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகள் மற்றும் ஒரு புதிய ரயில் பாதை உள்ளிட்ட முக்கியமான துறைகளை உள்ளடக்கிய ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
மேலும் பிராந்திய இணைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில் பிரதமர் முதல் முறையாக பௌத் மாவட்டத்தை தேசிய ரயில்வே நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கும் முதல் ரயில் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் நகர்ப்புற ஒடிசாவில் நிலையான இயக்கத்தை மேம்படுத்துவதற்காக தலைநகர் பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து முன்முயற்சியின் கீழ் 100 மின்சார பேருந்துகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்
