Kathir News
Begin typing your search above and press return to search.

ஏப்ரல் 19 தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்! தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஏப்ரல் 19 தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்! தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
X

SushmithaBy : Sushmitha

  |  16 March 2024 5:08 PM IST

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடப்பு மக்களவையின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் இறுதியில் முடிவடைய உள்ளதால் அதற்குள் புதிய பார்லிமென்ட் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. அதனால் இதற்கான தேர்தல் ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக பரபரப்பாக செய்யப்பட்டு வருகிற நிலையில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போது டெல்லியில் நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணைய ராஜ்குமார், ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அதன் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியில் தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சதீஷ்கர் மற்றும் ஜம்மு காஷ்மீர் என வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அதற்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற மார்ச் 20ஆம் தேதியும், வேட்பு மனு பரிசீலை மார்ச் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் வேட்ப மனு வாபஸ் பெறுவது மார்ச் 30ஆம் தேதி எனவும் அறிவித்துள்ளார். அதோடு ஓட்டு எண்ணிக்கையானது ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News