ஜூன் 19 இல் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்திய விண்வெளி வீரர்:இஸ்ரோ அறிவிப்பு!

By : Sushmitha
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏற்றிச் செல்லும் ஆக்ஸியம்-4 பணி ஜூன் 19 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை இன்று தெரிவித்தார்
வானிலை ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட்டில் எரிபொருள் கசிவு மற்றும் ஐஎஸ்எஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு போன்ற காரணங்களால் இந்தப் பணி பல முறை ஒத்திவைக்கப்பட்டது ஆரம்பத்தில் மே 29 ஆம் தேதிக்கு Ax-4 பணி திட்டமிடப்பட்டது, பின்னர் அது ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது பின்னர் ஜூன் 10 ஆம் தேதிக்கும் பின்னர் ஜூன் 11 ஆம் தேதிக்கும் தாமதமானது ஜூன் 12 ஆம் தேதி விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக பணி ஒத்திவைக்கப்பட்டது
இந்த நிலையில் பால்கன் 9 ராக்கெட்டில் காணப்பட்ட திரவ ஆக்ஸிஜன் கசிவு வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது மேலும் ஜூன் 19 ஆம் தேதி இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளது
