உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2ஆம் இடத்திற்கு இந்தியா முன்னேற நட்புறவு அவசியம்,ரோட்டரி கருத்தரங்கில் அண்ணாமலை!

கோவை-பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ரத்தினம் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் மாவட்ட அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கு பிளாசம் என்ற பெயரில் இன்று 2025 பிப்ரவரி 15 தொடங்கியது இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த பல்வேறு ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் ரோட்டரி அமைப்புகள் சிறந்த பணிகளை செய்து வருகிறது
உலகில் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இந்தியா உள்ளது அடுத்த 25 ஆண்டுகளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற பல சவால்கள் உள்ளன குறிப்பாக இலங்கை மாலத்தீவு பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நட்புறவை தொடர வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது
அதுமட்டுமின்றி ஆப்பிரிக்கா நாடுகளில் 40 ஆண்டுகள் உலக வளர்ச்சியை நிர்ணயிக்கும் லித்தியம் போன்ற முக்கிய கனிமங்கள் அதிகமாக உள்ளது இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் மீது சீனா 70 சதவீத கட்டுப்பாட்டை கொண்டுள்ளது அமெரிக்கா 20 சதவீத கட்டுப்பாட்டையும் இந்தியா போன்ற மற்ற நாடுகள் 10 சதவீத கட்டுப்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது என்று பேசியுள்ளார்