Begin typing your search above and press return to search.
புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு!

By : Bharathi Latha
புதியதாக வாங்கப்படும் அனைத்து வகை இருசக்கர வாகனங்களுடன் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. நாட்டில் சாலை விபத்துகளை குறைத்து, வாகன ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சில பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து உத்ரவிட்டுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி முதல் விற்பனையாகும் அனைத்து வகை இரு சக்கர வாகனங்களுடன் கட்டாயமாக, இந்திய தர நிர்ணயத்தால் (BIS) சான்றளிக்கப்பட்ட 2 ஹெல்மெட்டுகளை வழங்கவேண்டும் என்று கூறி உள்ளது.
இதேபோன்று ஏபிஎஸ் (ABS) என்ற நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பிரேக் அமைப்புகள் பொருத்தப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
Next Story
