Kathir News
Begin typing your search above and press return to search.

அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் 2வது ப்ரீ-வெட்டிங் சூட் வீடியோ.. சமூக வலைதளங்களில் வைரல்..

அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் 2வது ப்ரீ-வெட்டிங் சூட் வீடியோ.. சமூக வலைதளங்களில் வைரல்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Jun 2024 5:00 PM IST

அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் இடையே வருகிற ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த திருமணத்திற்கான ப்ரீ - வெட்டிங் கடந்த மார்ச் மாதம் 1-3 தேதிகளில் குஜராத், ஜாம் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ப்ரீ-வெட்டிங் நடத்தி இருக்கிறார்கள் இந்த தம்பதியினர். அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் இடையே 1-வது ப்ரீ - வெட்டிங் நிகழ்வுகள் அனைத்துக்கும் முகேஷ் அம்பானியின் சொந்த ஊரான குஜராத், ஜாம் நகரில் நடைபெற்றது.

அதையடுத்து மற்றொரு ப்ரீ-வெட்டிங் சூட் தற்போது இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கப்பலில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து இருக்கிறது. மேலும் இந்த வெட்டிங் சூட் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டிங் ஆகி உள்ளது. அது மட்டும் கிடையாது இந்த பிரீ வெட்டிங் ஷூட்டில் பல்வேறு பிரம்மாண்டமான அம்சங்களும் இடம்பெற்று இருக்கிறது. மே 29 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கொண்டாட்டத்தில் பிரபலமான அமெரிக்க இசைக்குழுவான பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் இத்தாலியில் நிகழ்ச்சி நடத்துகிறது.


சல்மான் கான், ரன்வீர் சிங், கரீனா கபூர் மற்றும் ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்கள் இத்தாலியில் மகிழ்ச்சியான இந்த நிகழ்வில் பங்கேற்று உள்ளார்கள். கூடுதலாக, இத்தாலியைச் சேர்ந்த ரன்வீர் சிங் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோரின் படங்களும் வெளிவந்துள்ளன. மேலும் இந்திய பாடகர் குரு ரந்தாவா மற்றும் அர்மாண்டோ கிறிஸ்டியன் பெரெஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க ராப்பர் பிட்புல் ஆகியோரின் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News