புதிய பான் 2.0 திட்டத்தால் பழைய பான் கார்டுகளின் நிலை என்ன:விளக்கம் கொடுத்த மத்திய அரசு!
By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூபாய் 1,435 கோடியில் பான் 2.0 என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இந்த திட்டமானது தொழில்நுட்ப ரீதியாக வரி செலுத்துவோரின் பதிவு செய்திகளை தரமான முறையில் எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியிருந்தார்
மேலும் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட பிறகு அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான வணிக அடையாளமாக பான் கார்டு மாற்றப்படும் என்றும் கூறியிருந்தார் இதனால் புதிய பான் கார்டுகள் விண்ணப்பிக்க வேண்டுமா என்ற கேள்வியும் தற்போது உள்ள பான் கார்டுகளின் விலை என்ன என்று கேள்வியும் எழுந்தது
இந்தக் கேள்விகளுக்கு பதிலாக இந்த திட்டத்தின் கீழ் புதிய பான் கார்டுகளை விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஏற்கனவே உள்ள பான் கார்டு தான் அப்டேட் செய்து புதிய வடிவில் கொடுக்கப்படும் என்றும் க்யூஆர் உடன் கூடிய புதிய பான் கார்டுகளை வேண்டும் என நினைப்பவர்கள் விண்ணப்பித்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது