விமான நிலையத்தில் இனி டீ காபி 20 ரூபாய் மட்டுமே:பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு!

விமான நிலையங்கள் என்றாலே அங்கு இருக்கும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சாதாரணமான ஹோட்டல் மற்றும் கடைகளில் விற்கப்படும் விலையை விட அதிகமான விலையே இருக்கும் இதனால் சாதாரண பயணிகள் விமான நிலையங்கள் சென்றால் ஒரு டீ காபியை கூட வாங்க முடியாமல் இருந்து வந்தனர்
இந்த நிலையில் சாதாரண பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை விமான நிலையத்தில் உடான் யாத்ரீ கஃபே என்ற சிற்றுண்டி கடையை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்துள்ளார்
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் முதன்முறையாக இந்த சிற்றுண்டி திறக்கப்பட்டது இந்த சிற்றுண்டிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்பொழுது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது அதன் ஒரு படியாகவே சென்னை விமான நிலையத்தில் உடான் யாத்ரி காப்பே என்ற சிற்றுண்டியை மத்திய அரசு திறந்து வைத்துள்ளது
இந்த சிற்றுண்டியில் பத்து ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்களும் 20 ரூபாய்க்கு டீ மற்றும் காபி சமோசா வடை போன்றவையும் வழங்கப்படுகிறது