Kathir News
Begin typing your search above and press return to search.

'வளமைக்கான திட்டம்': 200 பள்ளிகளுக்கு ரூ.30 கோடி டிஜிட்டல் சாதனங்களை இலங்கைக்கு வழங்கிய இந்தியா!

வளமைக்கான திட்டம் என்ற பெயரில் இலங்கையின் தெற்கு மாகாணங்களில் உள்ள 200 பள்ளிகளுக்கு 2000 கையடக்க கணினிகள் உட்பட ரூபாய் 30 கோடி மதிப்பிலான டிஜிட்டல் சாதனங்களை இந்தியா நன்கொடையாக வழங்கியது .

வளமைக்கான திட்டம்: 200 பள்ளிகளுக்கு ரூ.30 கோடி டிஜிட்டல் சாதனங்களை இலங்கைக்கு வழங்கிய இந்தியா!
X

KarthigaBy : Karthiga

  |  7 July 2024 4:01 PM GMT

இலங்கைக்கு பல்வேறு நிதி உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. அந்த வகையில் அங்குள்ள பள்ளிகளை நவீனமயமாக்கும் நோக்கில் 'வளமைக்கான திட்டம்' என்ற பெயரில் தொழில்நுட்ப சாதனங்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டது .இந்த விழா இலங்கை தெற்கு மாகாணத்தில் உள்ள காலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் .அப்போது ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது :-

நவீன தொழில்நுட்ப சாதனங்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி. இலங்கையில் இந்திய தொழில்நுட்ப கழக வளாகத்தை அமைக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விருப்பத்தையும் நான் வரவேற்கிறேன். அதேபோல் இந்தியாவுடன் எரிவாயுத் துறையில் மேலும் பல ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.

இது தொடர்பாக அந்நாட்டு அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் காலி மாவட்டத்தில் 150 பள்ளிகளுக்கும் ஹம்பாந்தோட்டை, மாதாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 பள்ளிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 200 ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான சாதனங்களையும் 2000 கையடக்க கணினிகளையும் இந்திய அரசு வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News