இந்தியா- தாய்லாந்துஉறவு 2000 ஆண்டு பழமை: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவும், தாய்லாந்தும் 2000 ஆண்டுகளுக்கு மேலான ஆழமான கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளது என பிரதமர் மோடி பேசி உள்ளார். வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக தாய்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பௌத்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசும் போது, புத்தரின் போதனைகள் உலக அமைதிக்காக வகுக்கப்பட்டது. இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் 2000 ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான கலாச்சார உறவு இருந்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் உறவுகள் மேம்பட்டு உள்ளன.
உலகில் அனைவருக்கும் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது நல்ல வழிகாட்டியாக பௌத்தம் விளங்குகிறது.புத்தர் மீதான மரியாதையை இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளில் மூலம் காணலாம்.புத்தர் கூறியுள்ள அரசியல் நாம் நினைப்பதற்கு அப்பாற்பட்ட நல்ல வழிகாட்டுடன் கூடிய அறிவுரைகள் ஆகும்.புத்த மதம் தொடர்பான புண்ணிய தளங்களை இணைக்க இந்திய சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்று நாளந்தா மகாவிஹாரா . புத்தரின் போதனைகளை உலக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை இந்தியா எடுத்த இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.