விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000!! தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு திட்டம்!!

By : G Pradeep
விவசாயம் என்பது நாட்டில் மிகவும் முக்கியமான ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக மானிய திட்டங்கள், கடன் உதவி திட்டம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிஎம் கிசான் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி ஒரு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை 3 தவணைகளாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டதிற்கு ஆண்டுதோறும் 75 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது.
திட்டத்தின் கீழ் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.2000 செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடைசி தவணை செலுத்தப்பட்ட நிலையில் நான்கு மாதம் வாழ்வதற்கு முன்பாக தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு முன்பாகவே ரூ.2000 செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. எனவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தீபாவளிக்கு மத்திய அரசு ரூ. 2000 செலுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
