விவசாயிகளின் வங்கி கணக்கில் விழப்போகும் ரூ.2000..! இன்னும் பதிவு செய்யவில்லையா உடனே பதிவு பண்ணுங்க!

By : G Pradeep
சிறிய மற்றும் கடைசி நிலம் கொண்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் பிஎம் கிசான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் இந்திய குடிமக்கள் மற்றும் விவசாய நிலம் கொண்டவர்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம். வருமான வரி செலுத்தும் விவசாயிகள், ஓய்வூதியம் பெறும் பேராசிரியர்கள், நிறுவனமோ அல்லது நிறுவன நிலம் வைத்திருப்பவர்களோ திட்டத்தில் பயன்பெற முடியாது.
இந்த பிஎம் கிசான் திட்டத்தின் படி 21 வது தவணை நவம்பர் மாதத்தில் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000 பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்னும் eKYC செய்து கொள்ளாத அல்லது புதிய பதிவு செய்யாத விவசாயிகள் தங்களுடைய தவணையை பெற முடியாது என்று கூறப்படுகிறது.
இத்திட்டத்தில் அனுப்பப்படும் நிதியானது சரியாக பயனாளிகளுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக eKYC கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி தவறான தகவலோ அல்லது பதிவு செய்யாத விவசாயிகளோ பணத்தை பெற முடியாது. புதிய விவசாயிகள் பதிவு செய்வதற்கு PMKisan.gov.in இணையதளத்தில் 'New Farmer Registration' என்பதை தேர்ந்தெடுத்து ஆதார், மாநிலம், கன்ட்ரோல் குறியீடு உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட்டு OTP பதிவை உள்ளிட்டு அதன் பிறகு வரும் தகவலை சரி பார்க்கவேண்டும். அதன்பின் அவர்களின் பெயர் பயனாளி பட்டியலில் சேர்க்கப்படும்.
