தமிழகத்தில் ரூ. 20,000 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலைகள்: மோடி அரசு கொடுத்த புது அப்டேட்!

தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக்கும் போது, தமிழகத்தில் தற் போது 2,735 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளின் அளவு விரைவில் 3,698 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு அதிகரிக்கப்படும்.
அதுபோல சுங்கச் சாவடிக ளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என்றும் தகவல் கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் தேசிய நெடுஞ்சா லைகளில் உள்ள சுங்கச்சாவ டிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.தற்போது, 767 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி நிறைவு செய்யும் நிலையில் இருப்ப தாகவும், அடுத்த ஆண்டுக் குள் இவை திறக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & Image Courtesy: News