புதிய கல்விக் கொள்கை 2020.. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு அம்சங்கள்..
By : Bharathi Latha
2வது காசி தமிழ் சங்கமத்தின் முதலாவது கல்வி அமர்வு வாரணாசியில் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் குழுவுடன் நமோ படித்துறையில் 2 மணி நேரம் ஆலோசனையும், உரையாடலும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர்.வேல்ராஜ், மால்வியா மிஷன் தலைவரும், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வேத அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் உபேந்திர குமார் திரிபாதி, பல்கலைக்கழகத்தின் கல்வித் துறை பேராசிரியர் சுனில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளர்ந்த இந்தியாவில் ஆசிரியர்களின் பங்கு குறித்து பேச்சாளர்கள் விவாதித்தனர். இந்த அமர்வில், ஆசிரியர் குழு கேட்ட கேள்விகளுக்கு பேச்சாளர்கள் சிறப்பாக பதிலளித்தனர். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை தலைப்புகள், இந்திய அறிவு மரபு, மின்னணு தொழில்நுட்பம் மூலம் கல்வி, தாய்மொழி உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆழமாக விவாதித்தனர். நாட்டின் புதிய கல்விக் கொள்கை 2020 வளர்ந்த இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் என்று பேராசிரியர் உபேந்திர திரிபாதி கூறினார். குருகுலக் கல்வி முறைக்கும், தாய்மொழிக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், 14 வயது குழந்தைக்கு குருகுலக் கல்வியை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார். இது அவர்களின் அறிவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பண்பு மேம்பாடு அடையும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த வயதிற்குள் குழந்தைகள் இத்தகைய அமைப்பு முறையில் வளர்ந்தால், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களாக இருக்க தயாராக இருப்பார்கள் என்று மத்திய கல்வி அமைச்சக இயக்குநர் எம்.எம்.சிங் கூறினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழு, நாட்டின் கலாச்சார வரலாறு, பாரம்பரியம் குறித்து நவீன, எதிர்கால தலைமுறையினருக்கு எவ்வாறு எடுத்துரைப்பது என்பது குறித்து விவாதித்தனர். புதிய கல்விக் கொள்கைக்காக அனைவரும் அரசைப் பாராட்டிய நிலையில், நாட்டின் வரலாறு, கற்பித்தல் முறைகள் குறித்தும் விரிவான விவாதம் நடைபெற்றது.
Input & Image courtesy: News