Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய கல்விக் கொள்கை 2020 திறந்தவெளி பல்கலைக்கழகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது:மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

தேசிய கல்விக் கொள்கை 2020 திறந்தவெளி பல்கலைக்கழகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது:மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!
X

SushmithaBy : Sushmitha

  |  5 March 2025 4:27 PM

ஜம்முவில் இன்று 5 மார்ச் 2025 நடைபெற்ற இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக மண்டல மையத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பணியாளர் பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மூலம் திறந்தவெளிப் பல்கலைக்கழகக் கலாச்சாரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும் என்று தெரிவித்தார்

கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் குறிப்பாக சமூக-பொருளாதாரத் தடை காரணமாக முறையான கல்வி நிறுவனங்களை அணுக முடியாதவர்களுக்கு மாறுபட்ட கற்றல் வாய்ப்புகளை இது வழங்குவதாகவும் கூறினார் இதுபோன்ற திறந்த வெளிப் பல்கலைக்கழகங்களின் நோக்கங்களுடன் தேசிய கல்விக் கொள்கை 2020-ல் உள்ள முற்போக்கான அம்சங்கள் ஒத்துப்போவதாகவும் தெரிவித்தார்

பாடத்திட்டங்களை மாற்றுவதன் மூலமோ தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் அவற்றை இணைப்பதன் மூலமோ வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் மாணவர்கள் தங்கள் கற்றல் பாதைகளைப் பன்முகப்படுத்திக் கொள்வதில் தேசிய கல்விக்கொள்கையின் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்

மேலும் 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை மூலம் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக மாறியுள்ளதாகவும் மாணவர்கள் ஏ++ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News