Kathir News
Begin typing your search above and press return to search.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் 2023!! பாஜக அளித்த வாக்குறுதிகள்!!

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் 2023!! பாஜக அளித்த வாக்குறுதிகள்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 March 2026 8:16 PM IST

அசாம் தேர்தலுக்கு பாஜக 31 வாக்குறுதிகளை அளித்துள்ளது. பொது சிவில் சட்டம், லவ் ஜிகாத் தடை, பெண்களுக்கு ரூ.3,000 உதவித் தொகை உள்ளிட்டவை அடங்கும்.


ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.


முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, "அசாமை நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறோம்" என்றார். பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற திட்டமிட்டுள்ளது.


காங்கிரஸ் வலிமையுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. அசாம் கன பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் உள்ளன.


பாஜக அளித்துள்ள வாக்குறுதிகளில், வங்கதேச ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மீட்டெடுக்கப்படும், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு பல்கலைக்கழகம், ஒரு பொறியியல் கல்லூரி உருவாக்கப்படும் என்பன அடங்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News