Kathir News
Begin typing your search above and press return to search.

பட்ஜெட் 2024 :வரிவிகித கட்டமைப்பில் மாற்றம்- அரசுக்கு இழப்பீடு ஆனாலும் பயன்பெறும் ஊழியர்!

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரிவிகித கட்டமைப்பில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் சம்பளம் பெறும் நடுத்தர ஊழியர் மாதம் 17,500 வரை சேமிக்க முடியும்.

பட்ஜெட் 2024 :வரிவிகித கட்டமைப்பில் மாற்றம்- அரசுக்கு இழப்பீடு ஆனாலும் பயன்பெறும் ஊழியர்!
X

KarthigaBy : Karthiga

  |  23 July 2024 8:21 AM GMT

2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “புதிய வருமான வரி விதிப்பில் வரி விகிதக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும். வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி விதிக்கப்படும். ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 10% வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு 15% வரி விதிக்கப்படும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் 30% வரி விதிக்கப்படும். இதன் மூலம், சம்பளம் பெறும் ஊழியர் ஆண்டுக்கு ரூ.17,500 வரை வருமான வரியைச் சேமிக்க முடியும்.

புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்படும். அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்துக்கான பிடித்தம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் சுமார் 4 கோடி சம்பளம் பெறும் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். 1961-இன் வருமான வரிச் சட்டம் ஆறு மாதங்களில் மறுஆய்வு செய்ய பட்ஜெட் முன்மொழிகிறது. வருமான வரி சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் வருமான வரிச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News