Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய பட்ஜெட் 2024: ஜொலிக்க இருக்கும் இந்திய தொழில் துறை..

மத்திய பட்ஜெட் 2024: ஜொலிக்க இருக்கும் இந்திய தொழில் துறை..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 July 2024 10:38 AM GMT

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் காலை 11 மணிக்கு தொடங்கிய தனது உரையை பகல் 12 30 மணிக்கு நிறைவு செய்தார். சரியாக 84 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் அனைவரும் எதிர்பார்த்த தொழில்துறைக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருக்கிறது. குறிப்பாக தொழில்துறையை மெருகேற்றும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்து இருக்கிறது. தொழில்துறை சம்பந்தப்பட்ட முக்கிய சிறப்பம்சங்கள் இதோ, தொழில்துறை உற்பத்தி துறையில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.


சிறு, குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படும். முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படும். இவர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை தரப்படும். 12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.


இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படும். ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News