பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் தரத்தை உயர்த்திய 'செமிகான் 2024' மாநாடு!
உலகில் ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'சிப்' இருக்க வேண்டும் என்பதே நமது கனவு என்று பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாடாவில் செமி கண்டக்டர் தொடர்பான 'செமிகான் 2024' என்ற மாநாடு நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:- ஸ்மார்ட் போன் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்துக்கும் அடிப்படையாக செமி கண்டக்டர்கள் நிகழ்ச்சியில் திகழ்கின்றனர். உள்நாட்டில் செமி கண்டக்டர் உற்பத்தியில் முதலீட்டை பெருக்க வேண்டும் .செமி கண்டக்டர் உற்பத்தியில் ஏற்கனவே ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் உலகம் முழுவதும் பொருள்கள் விற்பனையில் இடையூறு ஏற்பட்டது. சீனாவில் கடும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை சார்ந்திருந்த துறைகளும் பாதிக்கப்பட்டன .அந்த துறைகளில் 'சிப்' களும் அடங்கும். ஒவ்வொரு மின்னணு சாதனத்திற்கும் சிப் முக்கியம். இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தியில் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலை நிலவுகிறது.
சீர்திருத்த நடவடிக்கைகளும் நிலையான கொள்கைகளும் தொழில்நுட்ப அறிவு மிக்க சந்தையும் இந்தியாவில் உள்ளன. உலகில் ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'சிப்' இருக்க வேண்டும் என்பதுதான் நமது கனவு. இந்தியாவை செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இன்றைய இந்தியா உலகத்துக்கே உதவிகள் வழங்குகிறது .மற்ற நாடுகளில் சிப்புகள் குறைந்தாலும் இந்தியாவில் குறையாது.
மின்னணுவியல் துறையைப் பொறுத்தவரை மின்னணு உற்பத்தி தொடர்பான அனைத்து பணிகளும் இந்தியாவில் நடைபெற வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம். இன்றைய இந்தியாவின் மின் அறிவியல் துறை 15000 கோடி டாலர் மதிப்புமிக்கது. 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதை 50 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த விரும்புகிறோம். இதன் மூலம் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.