பாரத்டெக்ஸ் 2025: தமிழ்நாட்டில் களைகட்டிய ரோட்ஷோ
By : Bharathi Latha
கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத்டெக்ஸ் 2025 - கரூரில் ரோட்ஷோவை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் ஜவுளி மதிப்புச் சங்கிலியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாரத்டெக்ஸ் 2025ஐ நோக்கிய ஒரு நடவடிக்கையாகும்.
கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் செயல் இயக்குநர் ஸ்ரீதர் பாரத் டெக்ஸ் 2025 ரோட்ஷோ நிகழ்ச்சியின் நோக்கத்தை எடுத்துரைத்து, வரவேற்புரை நிகழ்த்தினார். கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரும், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் முன்னாள் தலைவருமான கோபாலகிருஷ்ணன் முக்கிய உரையாற்றினார். ஜவுளித் துறையை முன்னேற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை விளக்கினார்.
பாரத்டெக்ஸ் 2025 இந்தியாவின் ஜவுளித் தொழிலுக்கு ஒரு மைல்கல் நிகழ்வாக மாறுவதை உறுதி செய்து, பல்வேறு வகையான தயாரிப்புகளைக் கொண்டிருப்பதில் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ளது. இந்தியாவின் முக்கிய ஜவுளி மையங்களில் ஒன்றான கரூர் இந்த நிகழ்வை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
செயல் இயக்குநர் ஸ்ரீதர் பாரத் டெக்ஸ் 2025 பற்றியும், கடந்த பதிப்பின் சாதனை மற்றும் உலகிலிருந்து பார்வையாளர்களின் வருகையை ஈர்ப்பதற்கான உத்திகள் பற்றியும் கூறினார். உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியின் போது பாரத் டெக்ஸ் குறித்த சிறப்பு ஒலி, ஒளி காட்சி திரையிடப்பட்டது.
Input & Image courtesy: News