மத்திய பட்ஜெட் 2025: ஏழை மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்தது எப்படி தெரியுமா?

நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 8-வது முறையாக நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்புகள் பல இடம்பெற்று இருந்தன. தனிநபருக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை மற்றும் பட்டியலின பழங்குடியின பெண்கள் லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி வரை கடன், என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 8- வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மூத்த குடிமக்களுக்கான டி.டி.எஸ் (Tax Deducted at Source) வரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து இரட்டிப்பாகி 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கான டிடிஎஸ் வரம்பும் 2.4 லட்சம் ரூபாயில் இருந்து 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Input & Image Courtesy: News