தைப்பூசம் 2025:ஆறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்,பாதுகாப்பு குறைபாடு என மக்கள் குற்றச்சாட்டு!

By : Sushmitha
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்தது அதற்கு காவல்துறை அனுமதி வழங்காமல் 144 தடை உத்தரவை பிறப்பித்தது இருப்பினும் கடந்த நான்காம் தேதி நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பழங்காநந்தத்தில் ஒரு மணி நேரம் போராட்டம் நடந்த அனுமதி வழங்கப்பட்டது
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் முருகனின் சிறப்பு விழாவான தைப்பூச திருவிழாவை விட்டு ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி குவிந்தனர், இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது முருகன் கோவில் மலையை சுற்றிலும் சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக செய்திகளின் வெளியானது
திருப்பரங்குன்றம் மட்டுமின்றி தமிழ்நாடு அங்கு உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது ஆனால் இந்து சமய அறநிலையத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர செய்யவில்லை என்று கோவிலுக்கு வருகை புரிந்த மக்கள் தங்கள் வேதனைகளை தெரிவித்து வருகின்றனர் அதாவது சென்னை வடபழனி சிறுவாபுரி முருகன் கோவில் திருவள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள முருகன் கோவிலில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் குழந்தைகள் முதல் பெண்கள் கூட்டத்தில் சிக்கி தவிக்கிறார்கள் என்றும் செய்திகளில் தெரிவிக்கின்றனர்
