ரோபோ மிஷன் மூலம் 2025-ல் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யானிற்கான சோதனைகளை தொடங்க உள்ள இந்தியா!

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்தின் சோதனைகள் இந்த ஆண்டு ரோபோ பயணத்தின் தொடக்கத்துடன் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்த நல்லாட்சிக்கான விண்வெளி தொழில்நுட்பம் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் விண்வெளி ஆய்வுக்கான இந்தியாவின் வரைபடத்தைப் பகிர்ந்து கொண்டு இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் மிஷனுக்கான சோதனைகள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரோபோ மிஷனுடன் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்
மேலும் பேசிய அமைச்சர் இந்த பணிக்காக நான்கு விண்வெளி வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்காவால் சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட அழைக்கப்பட்டுள்ளார் மேலும் இந்தியா 2035 ஆம் ஆண்டுக்குள் தனது சொந்த விண்வெளி நிலையமான பாரத் அந்தரிக்ஷ் நிலையத்தை அமைக்க இலக்கு வைத்துள்ளது என்றும் 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் விண்வெளி வீரரை சந்திரனுக்கு அனுப்புவதே இந்தியாவின் இலக்கு என்றும் கூறியுள்ளார்
இந்தியா 433 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது அவற்றில் 396 செயற்கைக்கோள்கள் 2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஏவப்பட்டு 192 மில்லியன் டாலர்களையும் 272 மில்லியன் யூரோக்களையும் வருவாய் ஈட்டியதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்தியாவின் விண்வெளி பட்ஜெட் 2013-14 ஆம் ஆண்டில் 5,615 கோடியிலிருந்து சமீபத்திய பட்ஜெட்டில் 13,416 கோடியாக மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்றும் இது 138.93 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தன் உரையில் குறிப்பிட்டார்