Kathir News
Begin typing your search above and press return to search.

குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025:லோக்சபாவில் அமித்ஷா விளக்கம்!

குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025:லோக்சபாவில் அமித்ஷா விளக்கம்!
X

SushmithaBy : Sushmitha

  |  27 March 2025 4:26 PM

இந்தியாவிற்கு வருகின்ற வெளிநாட்டினர் வருகையை நிர்வகிப்பதற்காக பாஸ்போர்ட் சட்டம் 1920 வெளிநாட்டினர் பதிவு சட்டம் 1939 வெளிநாட்டினர் சட்டம் 1946 மற்றும் குடியுரிமைச் சட்டம் என நான்கு விதமான சட்டங்கள் உள்ளது இந்தச் சட்டங்கள் அனைத்துமே தற்போது அமலில் இருக்கிறது ஆனால் அவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட சட்டங்கள்

அதனால் அந்த சட்டங்களை தற்போது ஒதுக்கிவிட்டு புதிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து சமீபத்தில் லோக்சபாவில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025ஐ தாக்கல் செய்தது இதுகுறித்து லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் கல்வி சுகாதாரம் சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினரை வரவேற்க மத்திய அரசு என்றுமே தயாராக உள்ளது ஆனால் நாட்டிற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல என தெரிவித்துள்ளார்

மேலும் இந்த மசோதா நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு பொருளாதாரம் மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும் என்றும் இந்தியா வருபவர்களின் அனைத்து தகவல்களும் இந்த மசோதா கிடைப்பதை உறுதி செய்யும் என கூறியுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News