டிசம்பர் 2025-க்குள் முடிவடையும் மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள்!மக்களவையில் நிதின் கட்கரி!

தூத்துக்குடி எம்பி கனிமொழி மக்களவையில் தேசிய நெடுஞ்சாலை மதுரை-தூத்துக்குடி பகுதியில் பராமரிப்பு பிரச்சனைகள் தொடர்பாக வருகின்ற பல புகார்கள் பற்றி அரசுக்கு தெரியுமா அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்
அதாவது நீங்கள் குறிப்பிட்ட சாலை பகுதி பற்றி வந்திருக்கும் புகார்களை அரசு அறிந்திருக்கிறது. இந்த சாலைகள் ஆரம்பத்தில் பில்ட் ஆபரேட் டிரான்ஸ்பர் திட்டத்தின் கீழ் மதுரை-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது ஆனால் அந்த நிறுவனம் செய்த பல தவறுகளால் அந்த ஒப்பந்தம் 2023 மார்ச் 17ஆம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டது
இதற்குப் பிறகு அந்த பகுதியில் உள்ள முழு சாலையின் மேல் அடுக்கு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 144.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது அதன்படி 46.3 கிலோமீட்டர் சாலைகளுக்கான பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது மீதமுள்ள அனைத்தும் டிசம்பர் 2025க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்