பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் 2025: 3 கோடி வீடுகளுக்கு மோடி அரசு ஒப்புதல்!

கிராமப்புறங்களில் "அனைவருக்கும் வீடு" என்ற இலக்கை அடைவதற்காக, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஏப்ரல் 1, 2016 முதல் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது மார்ச் 2029 க்குள் தகுதியான 4.95 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டுவசதியை வழங்கும். 02.02.2025 நிலவரப்படி, 3.79 கோடி வீடுகள் கட்டுவதற்கான ஒட்டுமொத்த இலக்கு மாநிலங்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதில் 3.34 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 2.69 கோடி வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன.
கூடுதலாக 2 கோடி வீடுகள் கட்டுவதற்காகப் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தை 2024-25 முதல் 2028-29 வரை செயல்படுத்துவதற்கான முன்மொழிவை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 84,37,139 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இலக்குகளை அமைச்சகம் அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய 18 மாநிலங்களுக்கு நிர்ணயித்துள்ளது.
84,37,139 வீடுகளில், 46,56,765 வீடுகள் கட்டும் இலக்கு டிசம்பர், 2024 மற்றும் ஜனவரி 2025 மாதங்களுக்கு அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய 9 மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இலக்குகாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 84,37,139 வீடுகளில், 39,82,764 வீடுகளுக்கு 02.02.2025 அன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Input & Image Courtesy: News