Kathir News
Begin typing your search above and press return to search.

மகா கும்பம் 2025:திரிவேணி சங்கமத்தில் 42 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்,புதிய சாதனையை படைக்கும் வருகை பதிவு!

மகா கும்பம் 2025:திரிவேணி சங்கமத்தில் 42 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்,புதிய சாதனையை படைக்கும் வருகை பதிவு!
X

SushmithaBy : Sushmitha

  |  7 Feb 2025 1:34 PM

பிரயாக்ராஜில் 2025 ஆம் ஆண்டு மஹாகும்பத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர் இன்று பிப்ரவரி 7 காலை 10 மணி நிலவரப்படி 42 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடினர் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்நிகழ்ச்சிக்கு இன்னும் 19 நாட்கள் மீதமுள்ள நிலையில் புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மகர சங்கராந்தி மௌனி அமாவாசை மற்றும் வசந்த பஞ்சமி ஆகிய மூன்று குறிப்பிடத்தக்க முக்கிய விசேஷ ஞாயிறுகள் முடிந்த போதிலும் மகா கும்பமேளா தொடர்ந்து அதிக மக்களை ஈர்க்கிறது

உலகம் முழுவதிலுமிருந்து 10 மில்லியன் கல்பவாசிகள் மற்ற பார்வையாளர்கள் மற்றும் சாதுக்கள் உட்பட பக்தர்கள் புனித திரிவேணியில் நீராடுவதற்காக அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்

பங்கேற்பாளர்களில் முக்கிய நபர்கள்

உலகின் மிகப்பெரிய மகா கும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வெவ்வேறு நாட்களில் பங்கேற்றுள்ளனர் மேலும் பல சினிமா பிரபலங்களும் புனித நீரில் நீராடியுள்ளனர்

அதோடு பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் கலந்து கொள்ள உள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News