மோடி அரசின் பட்ஜெட் 2025: தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு..

2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியை விட 7.5 மடங்கு அதிகமாகும். 2014-ம் ஆண்டிலிருந்து 2025-ம் ஆண்டு வரை 1303 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் உள்ள முழு ரயில் கட்டமைப்புத் தூரத்தை ஏறத்தாழ நெருங்கியுள்ளது.
2014-ம் ஆண்டு முதல் 2,242 கிலோ மீட்டர் தூர ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94 சதவீதம் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.ரூ.33,467 கோடி செலவில் 2,587 கிலோ மீட்டருக்கான 22 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2948 கோடி மதிப்பில் 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கவச் அமைப்பை 1460 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 601 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
715 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் 2014-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் பயணிகளுக்கான மின்தூக்கிகள் 98-ம், நகரும் படிக்கட்டுகள் 53-ம் அமைக்கப்பட்டுள்ளன. 415 ரயில் நிலையங்களில் வைஃபை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.19 மாவட்டங்களை உள்ளடக்கி 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்த ரயில்கள் 20 நிலையங்களில் நின்று செல்கிறது. மால்டா நகரிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ஒரு அமிர்த பாரத் விரைவு ரயில் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தின் வழியே செல்கிறது. இரண்டு இடங்களில் அந்த ரயில் நின்று செல்கிறது.
Input & Image Courtesy: News