ஆற்றல் மாற்றத்தில் உலக தலைவர்களின் ஒருவராக உருவெடுக்கும் இந்தியா....2030'திற்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய இலக்கு!
By : Sushmitha
2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் சூரிய சக்தி திறன் 282 சதவீதம் உயர்ந்து கிட்டத்தட்ட 15 ஜிகாவாட்டாக உயர்ந்தது, இது இதுவரை இல்லாத அரையாண்டு நிறுவலாகும்.
மேற்கம் இந்தியா ரிசர்ச்சின் அறிக்கையின் படி இந்தியா 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஐந்து ஜிகாவாட் சூரிய மின்சக்தி திறனை தொடங்கியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் சூரிய மின்சக்தி திறனானது 9.9 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து ஜூன் 2024 இன் நிலவரப்படி நாட்டில் நிறுவப்பட்ட சூரிய திறன் 87.2 ஜிகாவாட் ஆக இருந்தது. இந்த சூரிய திறன் ஆனது மொத்த ஆற்றல் கலவையில் 19.5 சதவீதமாகும்.
அதே சமயத்தில் இந்தியாவில் சராசரி பெரிய அளவிலான திட்ட செலவுகள் காலாண்டில் இரண்டு சதவிகிதமும் ஆண்டுக்கு 26 சதவீதமும் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே சோலார் பேன் செலவுகள் வீழ்ச்சி சந்தித்து வருகிறதாகவும் இன்னும் இந்த செலவுகளின் வீழ்ச்சி தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு ராஜஸ்தான் குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காலாண்டிற்கு ஒரு முறை பெரிய அளவிலான சூரிய சக்தி திறன் சேர்த்தல்களில் முன்னிலையில் உள்ளன. மேலும் ஆற்றல் மாற்றத்தில் உலக தலைவர்களின் ஒருவராக தற்போது இந்தியா உருவெடுத்து உள்ளது. இதனால் 2030 ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன்களை சேர்ப்பதற்கான இலக்கையும் இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதில் சூரிய சக்தியும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஜூன் 30, 2024 நிலவரப்படி, புதுப்பிக்கத்தக்க பொருட்களின் மொத்த கிரிட்-இணைக்கப்பட்ட திறன் 148 ஜிகாவாட்டாக இருந்தது. சூரிய சக்தி பிரிவில் 85 ஜிகாவாட், காற்றாலை மின்சாரம் 47 ஜிகாவாட் மற்றும் பயோமாஸ் 1.4 ஜிகாவாட்.
சிறிய ஹைட்ரோ பிரிவு 5 ஜிகாவாட் ஆகும். நிறுவப்பட்ட சூரிய சக்தி 2014 இல் 2.6 ஜிகாவாட்டிலிருந்து 85.5 ஜிகாவாட்டாக 32 மடங்கு அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் புதுமையான சந்தை வழிமுறைகள் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைப்பதில் கருவியாக உள்ளன.