அதிகரிக்கும் இந்திய விண்வெளி ஸ்டார்ட் - அப்கள்! 2033 இல் இந்திய விண்வெளி பொருளாதாரம் அடையபோகும் சாதனை!
By : Sushmitha
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்திய விண்வெளி பொருளாதாரத்தின் தற்போதைய அளவு சுமார் 8.4 மில்லியன் டாலர் என்றும் மேலும் இது இந்திய விண்வெளிக் கொள்கை 2023 ஐ செயல்படுத்துவதன் மூலம் 2033 ஆம் ஆண்டிற்குள் இந்திய விண்வெளி பொருளாதாரம் 44 மில்லியன் டாலரை அடையும் என்று கூறியுள்ளார்.
மேலும், செயற்கைக்கோள் நிறுவுதல் மற்றும் செயல்பாடுகளுக்கு அரசு வழியின் கீழ் விண்வெளித் துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. விண்வெளித் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) ஊக்குவிப்பதற்காக, விண்வெளித் துறையானது டிபிஐஐடியுடன் கலந்தாலோசித்து, விண்வெளித் துறையின் எஃப்டிஐ கொள்கை வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் டிபிஐஐடி ஸ்டார்ட் - அப் இந்தியா போர்ட்டலின்படி, 2014ல் வெறும் 1 ஆக இருந்த விண்வெளி ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை தற்போது 2023ல் 189 ஆக உயர்ந்துள்ளது, அதோடு இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப்களில் முதலீடு 2023ல் 124.7 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
Source : India defence news