Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை 2036 ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்தும் மோடி அரசின் மேஜிக்

இந்தியாவை 2036 ஒலிம்பிக்கிற்கு தயார்படுத்தும் மோடி அரசின் மேஜிக்
X

SushmithaBy : Sushmitha

  |  22 July 2024 4:37 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி, ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது- 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்தியா தீவிரம் காட்டும். இதுதான் 140 கோடி இந்தியர்களின் கனவு. 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டியை நடத்தவும் இந்தியா ஆர்வமாக உள்ளது என்று ஒலிம்பிக் போட்டிக்கான கனவை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 1,32,000 பார்வையாளர்களை கொண்ட கிரிக்கெட் மைதானம் பிரதமர் மோடி அரசில் கட்டமைக்கப்பட்டது மற்றும் 141 வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை மும்பையில் 2023 அக்டோபர் 14 இல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதுமட்டுமின்றி வில்வித்தை விளையாட்டைக் கற்றுக்கொள்வதற்காக 'தனுர் வேத சம்ஹிதா' என்ற திட்டத்தை வெளியிட்டார். அதில் தனுஷ்வன், சக்ரா, பாலா, வாள்வீச்சு மற்றும் மல்யுத்தம் ஆகிய 7 திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான அம்சங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் விளையாட்டுகழகத்தை 800 கோடி ரூபாய் செலவில் மோடி அரசு மேம்படுத்தியது. இது தற்போது சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் விளையாட்டுகளின் வளர்ச்சிக்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள், நாடாளுமன்ற உறுப்பினர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அடுத்து நடைபெறவிருக்கும் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை மத்திய மோடி அரசால் தொடங்கப்பட்டது. மேலும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் போட்டியை இந்தியா நடத்துகிறது.

186 நாடுகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பைப் போட்டி, ஹாக்கி உலகக் கோப்பை, மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை ஆகியவற்றை இந்தியா நடத்தியது.

இது போன்று பிரதமர் மோடி அரசு 2036 ஒலிம்பிக்கிற்காக இந்தியாவை தயார்படுத்தி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News